- 20/06/2020
- Posted by: Thamizharasu Gopalsamy
- Category: Marketing
நமது நிறுவனத்தின் பொருளையோ சேவைகளையோ சந்தைப்படுத்தலுக்கு எவ்வாறு யுத்திகளை வகுப்பது?
ஒரு நிறுவனத்தின் வெற்றி என்பது அதன் உற்பத்தியை மட்டும் சார்ந்து இருப்பது இல்லை. சந்தையில் அந்த நிறுவனத்தின் பொருளுக்கு எந்த அளவுக்கு கிராக்கி உள்ளது என்பதை பொறுத்தே அந்த நிறுவனத்தின் வெற்றி அமைகிறது.
சேவையோ ,பொருளையோ விற்பனை செய்வதற்கான உத்திகளை வகுக்க வேண்டும் என்றால் முதலில் நமது வாடிக்கையாளர்களை பற்றிய தெளிவான விழிப்புணர்வு வேண்டும். அதாவது அவர்களுடைய வயது, கல்வி ,ஊர் சமூக அந்தஸ்து நமது வாடிக்கையாளர்கள் ஆண்களா, பெண்களா அவர்களுடைய வேலை அவர்களுடைய வருமானம், கல்வி மற்றும் அவர்களுடைய எதிர்பார்ப்பு இவற்றை டெமோகிராபிக் ப்ரொபைல் என்று கூறலாம். ஆகியவற்றில் முதலில் நமக்குத் தெளிவு வேண்டும்.
இவ்வாறு அதனை தெளிவாக சேகரித்த பின் உற்பத்தி செய்கின்ற பொருளை எளிமையாக சந்தைப்படுத்தி அதிக லாபத்தை அடைந்து வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவதோடு அவர்களை நிரந்தரமான வாடிக்கையாளர்களாக மாற்றலாம்.இனி சந்தைப்படுத்தலில் உள்ள இரண்டு வழிகளில் ஓன்று ஆன்லைனில் சந்தைப்படுத்துதல் மற்றோன்று ஆப்லைனில் சந்தைப்படுத்துதல்
இனி இவற்றை பற்றி விளக்கமாகச் சந்தைப்படுத்தல் ஆலோசகரின் வரிகளில் கீழே பார்க்கலாம்
I. ஆன்லைன் சந்தைப்படுத்தலின் யுத்திகள்:
1) சமூக ஊடக சந்தைப்படுத்தல்
உங்கள் விளம்பரத்தை அளவிடவும் கண்காணிக்கவும்
கூகிள் ஆட்வேர்ட்ஸ,xயுடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற ஆன்லைன் விளம்பர தளங்கள் உள்ளது. இது உங்கள் விளம்பரங்கள் தொடர்பான விரிவான புள்ளிவிவரங்களை உங்களுக்கு வழங்குகின்றன.இதன் மூலம் எவ்வளவு நபர்கள் விளம்பரத்தை பார்த்தார்கள் என்பதை கொண்டு விற்பனையை கணிக்கலாம்.நமது பொருளையோ சேவையையோ சந்தைப்படுத்துவதற்கான சரியாக சேனல்களை தேர்வு செய்ய வேண்டும். நான் இங்கு சேனல் என்று குறிப்பிடுவது இளம் வயதினர் சோசியல் மீடியாவில் அதிக நேரம் செலவிடுவார்கள். நமது நமது வாடிக்கையாளர்கள் இளம் வயதினர் எனில் நாம் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு சோசியல் மீடியாவை பயன்படுத்தலாம்.
2).தேடுபொறிமூலம் சந்தைப்படுத்தல்
கூகுள் தேடும் தளங்களில் தேடும்போது உங்கள் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் பற்றிய விவரங்கள் இருந்தால் மக்கள் எளிதில் அதனை பார்த்து உங்களை அணுகி பொருட்களை வாங்குவதற்கு கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக ஏற்படும் எனவே அதுபோன்ற சர்ச் என்ஜின் களில் நீங்கள் பயன்படுத்தி விற்பனை சந்தையை அதிகப்படுத்தலாம்.
3) வீடியோ சந்தைப்படுத்தல்
வீடியோ மூலம் தங்கள் பொருட்களின் தரம் அதன் பயன்பாடு மக்களின் வாழ்க்கை யில் எந்த எந்த வகையில் உதவுகிறது அழகாகவும் வாடிக்கையாளர்களை கவர்ந்து ஈர்க்கும் வகையில் விளம்பரம் படம் மூலம் சந்தைப்படுத்தலில் நிறைய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.
4) பிளாக்கிங்
இணையத்தில் அல்லது பல்வேறு செயலிகளில் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் பிளாக்கிங் செய்வதால் விற்பனை மேன்படும். ஒரு சந்தைப்படுத்துதலின் ஆலோசகராக எனது அறிவுரை என்னவென்றால், கண்களைக் கவரும் தலைப்புகளோடு நமது சேவைகள் அல்லது பொருள்களைப் பயன்பதினால் கிடைக்கும் நன்மைகளை விளக்கும் வகையில் பிளாக்கிங் செய்தல் மக்களை எளிதில் ஈர்க்கலாம்.
5) மின்னஞ்சல் சந்தைப்படுத்தல்
மின்னஞ்சல் வழியாக உங்கள் நிறுவன உற்பத்தி மற்றும் சேவையை பல மின்அஞ்சல் முகவரி களுக்கு அனுப்புவதன் மூலம் உங்களுக்கு சந்தைப்படுத்தல் எளிமையான ஓன்றாக மாறுவதுடன் வாடிக்கையாளர்களின் நேரடி தொடர்பு உங்கள் விற்பனையை அதிகமாக மாற்றும்.
6.இணைய சந்தைப்படுத்துதல்
நீங்கள் உங்கள் வாடிக்கையாளர் சுயவிவரத்தை கொண்டு அவர்களை உங்கள் இணைய உறுப்பினராக்கி உங்கள் பொருட்களை தனது நன்பர்கள் மற்றும் மற்றவர்களுக்கு சிபாரிசு செய்வதால் சலுகை விலையில் பொருற்களை தருவதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை எளிதில் ஈர்த்து விற்பனை செய்யலாம்.
II.ஆப்லைனில் சந்தைப்படுத்துதலில் வழிகள்
1) டெலி மார்க்கெட்டிங்
தொலைபேசி, மற்றும் இணையம் போன்ற தொலைதொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி வருங்கால வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்வது, தகுதி பெறுவது மற்றும் கேன்வாஸ் செய்வது என டெலிமார்க்கெட்டிங் வரையறுக்கப்படுகிறது.உங்கள் நிறுவனத்தின் என்று டெலி மார்க்கெட்டிங் துறையை தனியாக வும் எற்படுத்தி இல்லை என்றால் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு தனிப்பயிற்சி அளித்து உங்கள் சந்தையை விரிவுபடுத்தலாம்.பயிற்சிகான மென் பொருள் உள்ளது இதனை நீங்கள் தரவிரக்கம் செய்து பயன்படுத்தலாம்.
2) விளம்பரங்கள்
இதழ்,செய்தித்தாள்,தொலைக்காட்சி வர்த்தக காட்சிகளில் கண்கவர் விளம்பரங்களை உள்ளுர் சேனல்கள் மற்றும் சட்டிலைட் சேனல்களில் செய்யவது மூலம் சந்தைப்படுத்துதல் எளிமையாகும்.
உற்பத்தி பொருட்களை சரியான பண்டிகை காலங்களின் அபர்களை அந்த விளம்பர மூலம் மார்க்கெட்டிங் செய்ய விற்பனையும் இலாபமும் இரட்டிப்பாக பெருகும்.
3) நெட்வொர்க்கிங்
நிறுவனம் சார்ந்த கூட்டங்கள் மற்றும் வியாபாரம் நிமித்தமாக நடைபெறும் சந்திப்பு கூட்டங்களில் உங்கள் உற்பத்தி பொருட்களின் தரம்,விலை பற்றி கலந்து உரையாடும் போது தேவையினை அறிந்து அதற்கு ஏற்ப சந்தைபடுத்தினால் நன்றாக விற்பனை அமையும்.
5) மக்கள் தொடர்பு
ஒரு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுடன் மற்றும் வாடிக்கையாளராகும் சாத்தியமுடையவர்களுடன் தகவல் பரிவர்த்தனைகளை நிர்வகித்துக் கொள்வதற்கும் வளர்ப்பதற்கும், வர்த்தக சந்தைப்படுத்தல், வாடிக்கையாளர் சேவை, மற்றும் தொழில்நுட்ப உதவி ஆகியவற்றை அளிக்க மக்கள் தொடர்பு அதிகாரிகளை நியமனம் செய்து சந்தைப்படுத்தலாம்.
முடிவுரை:
சந்தைப்படுத்தல் என்பது சவாலான விளையாட்டு. ஒவ்வொரு வெற்றியிலும் தோல்வியிலும் பாடம் கற்றுக்கொண்டு வேகமாக முன்னேறுவார்கள் தங்கள் பொருட்களை இன்னும் அதிகப்பேரிடம் கொண்டு செல்வார்கள்.
உங்கள் நிறுவன தயாரிப்பு வாடிக்கையாளர்களுக்கு ஏன் தேவை என்பதை அவள் புரிந்து கொள்ள வேண்டும்.உங்கள் தயாரிப்பு மற்றவையும் விட
சிறந்தது என்று அவளுக்குத் தெரிய வேண்டும். அவர்கள் செய்தால் சந்தையில் உங்கள் நிறுவனத்திற்கு என்று ஓர் இடம் எப்போதும் நிலைத்து நிற்கும.
Leave a Reply
You must be logged in to post a comment.