சிறந்த எண்ணங்களால் எவ்வாறு அசாதாரணமான இலக்குகளை அடைவது?

                  ஒவ்வொரு மனிதருக்கும் அவருடைய எண்ணங்கள் இன்று, நாளை இந்த இந்த வாரம் எவ்வாறு உள்ளதோ அதைப்போன்றே அவருடைய எதிர்காலம் அமைகின்றது. அப்படி என்றால் பலர் ஏன் தோல்வி அடைகின்றனர் பலர் ஏன் மிகப்பெரிய வெற்றியை அடைவதில்லை? மிகப்பெரிய வெற்றியை அடைய தவர்களின் எண்ணங்கள் எவ்வாறு உள்ளன?

எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகவும், இலக்குகள் இல்லாமல் இருப்பதும். வழிகாட்டுதலை அல்லது வழிகாட்டுணரை அடையாளம் காணாமல் இருப்பதும்.

வாழ்க்கையில் அனைவருக்குமே மிகப்பெரிய வெற்றியை அடைய வேண்டும் என்ற எண்ணம் உள்ளன. ஆனால் வெற்றி அடைவதற்கான வழிமுறை தெரியாத காரணத்தினாலேயே பெரும்பாலோனோர் தோல்வி அடைகின்றனர்.

இப்பொழுது உங்களுடைய பெரிய எண்ணங்களை நீங்கள் உங்கள் மனதில் விதைப்பதன் மூலம் எவ்வாறு 4 எளிதான வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்களுடைய மிகப்பெரிய இலக்கை எப்படி அடைவது என்பதை பற்றிப் பார்க்கலாம்.

என்ன சாதிக்கப் போகிறார்கள் ?

                 உங்கள் வாழ்க்கையின் நோக்கம் என்ன? உங்களது சேவையின் மூலமாகவோ அல்லது பொருளின் மூலமாகவோ நீங்கள் எவ்வாறு இந்த உலகை  மிகச் சிறந்த இடமாக மாற்றப் போகின்றீர்கள். உங்களுடைய  பேச்சிலும் செயலிலும் எப்பொழுதுமே மற்றவர்களுக்கு நன்மை தருபவையாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்கள் உங்களுடைய மிகப்பெரிய இலக்கு என்ன என்பதை முதலில் நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.

உங்களுடைய எண்ணங்கள் சிறியதாக இருந்தாலும் நீங்கள் அதனை அடைய லாம் மிகப்பெரிய இலக்காக இருந்தாலும் அதனை நீங்கள் அடையலாம் அதனால் நீங்களே முடிவு செய்யுங்கள் உங்களுடைய இலக்கு சிறியதாக இருக்க வேண்டுமா அல்லது மிகப்பெரியதாகச் சமுதாயத்தில் மாற்றம் அளிக்கவல்லவையாக இருக்கவேண்டுமா?  மார்டின் லூதர் கிங் ஜூனியர் அனைவருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டிப் போராடி வெற்றி பெற்றார். அதைப் போன்று ரைட் சகோதரர்கள் சாதாரண சைக்கிள் கடை நடத்தி வந்தனர் அவர்களால் விமானத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. எனவே இப்பொழுது நாம் எவ்வாறு இருக்கின்றோம் என்பதை வைத்து நமது இலக்குகளை நிர்ணயிக்க வேண்டிய அவசியம் கிடையாது. உங்களால் உங்கள் மனதில் என்ன விதைக்கப்படுகின்றதோ அதனை நீங்கள் நிச்சயம் அடைய முடியும்  என்பதனை நீங்கள் நம்ப வேண்டும். அது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றும் கூட.

சூழ்நிலையை அமைத்துக் கொள்ளுதல்:

               என்ன சாதிக்கப் போகிறீர்கள் என்ற உங்களுடைய மிகப்பெரிய இலக்கினை நிர்ணயித்தபிறகு., அந்த இலக்கினை அடைவதற்கு ஏற்றச் சூழ்நிலைகளை நீங்கள் பின்வருமாறு அமைத்துக் கொள்ளலாம்.

ஒரு வணிக பயிற்சியாளராக எனது அனுபவத்தில் இதைப் பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் சாதிக்க தேர்ந்தெடுத்துள்ள துறையில் இதற்கு முன்பே வெற்றி வெற்றி பெற்றவர்களிடம் நீங்கள் ஆலோசனைகளைப் பெறலாம் அல்லது அதன் சார்ந்த துறைகளில் உள்ள அமைப்புகளில் நீங்கள் இணைந்து கொள்ளலாம். உங்கள் இலக்கு சார்ந்த புத்தகங்களை நீங்கள் வாசிக்கலாம், தகவல்களைத் திரட்டலாம். எப்பொழுதும் உங்கள் இலக்கினை அடைவதற்கான வாய்ப்புகள் எங்கெங்கெல்லாம் உள்ளது என உங்களது சிந்தனைகளைச் செலுத்தலாம்.

இதனைத்தான் டார்வினின் கோட்பாடு மிகத் தெளிவாகக் கூறுகிறது. அந்தக் கோட்பாடு என்னவென்றால் எந்த ஒரு உயிரினமும் சூழ்நிலைக்குத் தக்கவாறு தன்னை மாற்றிக் தகவமைத்து கொள்கிறதோ அது மட்டுமே இந்த உலகில் உயிர் வாழத் தகுதி வாய்ந்ததாக அமைகிறது. மற்ற உயிரினங்கள் அந்தப் போராட்டத்தில் மடிந்து விடுகின்றது.

சரியான சூழலில் சரியான திட்டமிடுதல், தொலைநோக்குப் பார்வை, புத்திசாலித்தனமான உழைப்பு. மேற்கூறிய சூழ்நிலைகளை உங்களைச் சுற்றி அமைத்துக் கொள்ளும்பொழுது உங்களுடைய எண்ணம் நிறைவேறுகின்றன.

You have in your environment for success

You have in your environment for success, if you want success in basketball you have to be basketball ground for practice.

நம்பினால் வெற்றி:

                        எதையும் உங்களால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு எப்போதும் இருக்க வேண்டும். என்னால் முடியும் ,என்னால் முடியும். இதுவரை இந்த உலகத்தில் நம்பிக்கை இல்லாமலும் உத்வேகத்துடன் செயல் படாமலும் எதுவுமே சாதிக்கப்படவில்லை. ஒரு இலக்கை நோக்கி நீங்கள் சென்று கொண்டிருக்கும்பொழுது சிலசமயங்களில் இடையூறுகள் ஏற்படலாம் அப்படி ஏற்படும்போது அதனை எப்படி வெல்லலாம் என்று உங்களுடைய எண்ணங்களைச் செலுத்த வேண்டும் நம்பிக்கையை இழக்க உங்கள் மனதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. நாம் அடைய இருக்கும் மிகச்சிறந்த இலக்கினை எண்ணி ஒவ்வொரு கணமும் அதன் மீது அளவு கடந்த நம்பிக்கையை வைக்க வேண்டும். நம்பிக்கை வலுவாக இருக்கும்பொழுது தான் உங்களால் உத்வேகத்துடன் செயல்பட முடியும் உத்வேகத்துடன் செயல்படும்போது தான் உங்களது சிறந்த நோக்கம் வெற்றி பெறும்.

தொடர்ந்து செயல்படு :

                     முன்னேறு முன்னேறு என்ற வார்த்தை உங்களுக்குத் தாரக மந்திரமாக இருக்கட்டும் நிச்சயமாக நீங்கள் முன்னேறி ஒரு பெரிய வெற்றியைக் காண்பீர்கள் இதற்கு முன்னால் இருந்த வரலாற்றுக் சான்றோர்களை நினைத்துப் பாருங்கள். காந்தி எப்படி சாதித்தார் இவ்வளவு பெரிய வெற்றி அவருக்கு எப்படி கிடைத்தது. நமது தேசப்பிதா காந்தியடிகளை எடுத்துக்கொண்டீர்கள் என்றால் நமது நாடு நமது மக்கள் வேற்று தேசத்தினர்டம் அடிமைப்பட்டு உள்ளனர்.நமது நாட்டிற்கு எப்பாடுபட்டேனும் சுதந்திரம் வாங்கி விட வேண்டும் என்ற மிகச்சிறந்த எண்ணம் எவ்வளவு கடினமான இன்னல்களைச் சந்தித்த பொழுதும் மனம் தளராமல் நாட்டிற்கு சுதந்திரம் பெறச் செய்தார். நமது எண்ணங்கள் மற்றும் இலக்குகள் மிகச்சிறப்பாக இருக்கும்பொழுது நம்மால் தொடர்ந்து செயல்பட முடியும் நமது இலக்கினை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் உங்களுக்குக் கிடைக்கும். நாம் தொடர்ந்து செயல்பட்டு நமது எண்ணத்தினை உண்மை ஆக்குவதற்கு மிகவும் எளிமையாக இருக்கும்.

உங்களுடைய இலக்கு மிகப்பெரியதாக இருக்கட்டும் இந்தச் சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் நன்மை பயக்கக்கூடிய வையாக இருக்கட்டும் உங்களுடைய மிகப்பெரிய அசாதாரணமான வெற்றி நிச்சயம்.

 About Mr.Thamizharasu

              Hi., I am Thamizh well known Author,Speaker and Tamilnadu’s No:1 Business Coach and fitness enthusiast. I am a son of educationist and teacher and brother of successful business women., I have worked with more than 300 entrepreneurs in various domains such as Retail, Finance, Textile, Engineering etc.  I am on mission to empower 100000 entrepreneurs to achieve their goals and ambitions by providing proven business tools, systems and Strategies.Leave a Reply