நினைத்ததை அடைவதற்கான வழிமுறைகள்

இன்றைய உண்மை நிலை

உலகில் பெரும்பாலானோர் அவர்கள் கல்வியை முடித்தபிறகு வாழ்க்கையில் மிகச்சிறந்த வெற்றியை அடைய வேண்டும் பொருளாதார ரீதியாக மிகச்சிறந்த உயரத்துக்குச் செல்ல வேண்டும் என்ற கனவுகளோடு அவர்கள் வாழ்க்கையைத் தொடங்குகின்றனர். ஆனால் அவர்கள் ​நினைத்ததும் அவர்கள் அடைந்திருக்கும் நிலையிலும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கின்றன பலர் நினைத்ததை அடைவதில்லை அப்படி நினைத்ததை அடைய வேண்டுமென்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும் இந்த உலகில் ஒரு சதவீதத்தினரே மிகப்பெரிய வெற்றி அடைகின்றனர். ஐந்து சதவீதத்தினர் மட்டுமே ஓரளவு வெற்றி அடைகின்றனர். நாமும் மிகச் சிறந்த வெற்றியாளராக ஆவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இப்பொழுது பார்க்கலாம்.

ஏன் பலர் நினைத்ததை அடைவதில்லை?

failed

 why many are failing

                   இந்த உலகில் பலர் நினைத்ததை அடையாமலேயே இந்த உலகை விட்டு மறைந்து  விடுகின்றனர் அதற்கான சில முக்கியமான காரணங்களை இங்கு பார்ப்போம்

1) எந்த இலக்கினை அடைய வேண்டும் எப்பொழுது அடைய வேண்டும் என்பதில் தெளிவு இல்லாமல் இருப்பது.

2) இலக்கினை நிர்ணயித்த பிறகு அந்த இலக்கில் மட்டும் கவனத்தைச் செலுத்தாமல் பல்வேறு விஷயங்களில் கவனத்தை சிதற விடுவது.

3) அந்த இலக்கினை அடைவதற்கான அறிவையும் திறமையையும் வளர்த்துக் கொள்ளாமல் விடுவது.

4) இலக்கினை அடைவதற்கு தொடங்கும் முன்பு அல்லது தொடங்கிய பின்னரோ நம்பிக்கை இழப்பது.

 • இலக்கை நிர்ணயித்தல்

 •                 நாம் முதலில் செய்ய வேண்டியது நாம் என்ன அடைய வேண்டும். அதனை எப்பொழுது அடைய வேண்டும்? நீங்கள் அடைய நிர்ணயித்துள்ள இலக்கின் முக்கியத்துவம் என்ன ?  போன்ற கேள்விகளை நாம் இலக்கினை நிர்ணயிக்கும் போது நம்மிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்  அதற்குத் தெளிவான பதில் நம்மிடம் இருக்க வேண்டும்.

               "முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்" என்ற வள்ளுவப் பெருந்தகையின் வார்த்தைக்கு ஏற்ப முயற்சி ஒன்றை நீங்கள் விதையாக போட்டுவிட்டு கலாம் சொன்னது போல் "கனவு காணுங்கள் உறக்கத்தில் வருவதல்ல கனவு உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு" என்ற வார்த்தைக்கு உயிர் கொடுங்கள். தன்னம்பிக்கை ஒன்றுதான் இலக்கை அடையக்கூடிய சாவி சோம்பலைத் தூக்கி எறிந்துவிட்டு ஒவ்வொருநாளும்

  உங்கள் இலக்கை அடைவதற்காக நீங்கள் முன்னே சென்றாலே போதும் வெற்றி உங்கள் பாதையில் வந்து நிற்கும்.

 • விருப்பமே முக்கியம்

 • ​                      நீங்கள் அடைய வேண்டிய இலக்கை எட்டிப் பிடிப்பதற்கு உங்களின் விருப்பமே முக்கியமான காரணியாக செயல்படுகிறது. கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அவர்களின் பேச்சும் படி வெற்றியடைய எந்த ஒரு தகுதியும் யாருக்கும் தேவையில்லை. ஆனால் அவர்கள் இதயத்தைப் பின் பற்றி உற்சாக மூட்டும் வேலைகளை செய்து வந்தாலே அவர்களின் வெற்றி உறுதியாகும் என்றார். இதைத்தான் வரலாற்று வீரர் அலெக்ஸாண்டர் தற்கொலை முயற்சி செய்யத் துணிந்தவன் மழையையும் நகர்த்தி விடுவான் என்று மிக நேர்த்தியாக கூறியிருக்கிறார். நீ எதை அடைய விரும்புகிறாயோ அந்த இலக்கை அடைவதற்கு முதலில் முயற்சி செய் முயற்சியோடு உனது விருப்பத்தையும் அதில் வை. வெற்றி நிச்சயம்.

 • உள்ளார்ந்த திறன்

 •                    ஒருவன் தான் அடைய வேண்டிய இலக்கை அடைந்து வெற்றி பெறுவதற்கு உள் ஆழ்ந்த திறன் தேவை . நீங்கள் நினைத்ததை அடையும் வரை உங்கள் கவனம் முழுவதும் உங்கள் இலக்கின் மீது இருக்க வேண்டும். நடிகர் சூர்யா கஜினி படத்தில் கூறிய படி உள்ளார்ந்த திறன் என்பது தன்னால் முடியும் என்று அவன் நம்புவது. அந்த நம்பிக்கையை தனது செயல்களில் வெளிப்படுத்தி , இலக்கினை அடைவதற்கான வழிகளை மேற்கொள்ளுதல் மட்டுமல்லாது தனது ஒட்டுமொத்தமான சக்தியையும், கவனத்தையும், திறனையும் தனது இலக்கை நோக்கி மையப்படுத்தி அதில் பயணம் செய்து வெற்றி காண்பது.

 • இலக்கினை அடைவதில் உறுதியாக இருங்கள்

 •                           நீங்கள் உத்தேசித்துள்ள இலக்கை உங்களால் அடைய முடியும் என்பதில் உறுதியாக இருங்கள். அதிலிருந்து எப்போதும் நீங்கள் விலகிக் செல்லாதீர்கள். என்னென்ன வழிகளில் எப்படி எல்லாம் உங்களின் இலக்கை அடையலாம் என்பதை பற்றி திட்டமிடுங்கள். அதனை நோக்கி விடா முயற்சியுடன் பயணம் செய்யுங்கள். எது வரினும் அதை தகர்த்த வண்ணம் உங்கள் பார்வையில் மிகவும் கவனமாக அடி மேல் அடி வைத்து உங்கள் இலக்கினை நோக்கி செல்லவும். உங்கள் வெற்றி உங்கள் கையில் என்பதில் உறுதியாக இருங்கள்.

                           மேலே சொன்ன வழிமுறைகளை நீங்கள் கடைப்பிடிக்கும் பொழுது நீங்கள் நினைத்ததை நிச்சயமாக உங்களால் அடைய முடியும். இப்பொழுது செயல் படுங்கள் இப்பொழுது இலக்கை நிர்ணயம் செய்யுங்கள்.

  ​இந்தக் ​கட்டுரையை பகிரவும்.  5 Comments

  Leave a Reply