fbpx

தொழிலாளர்களை தக்க வைப்பதற்கும் அவர்கள் மிகச் சிறப்பாக செயல்படுவதற்கும் என்ன வழிமுறைகளை கையாள வேண்டும் ?

             நவீன மயமாக்கப்பட்ட இன்றைய சூழ்நிலையில் பணியாற்றுவதற்கு திறமையான தொழிலாளர்கள் கிடைப்பது மிகவும் அரிதாக வருகிறது. அப்படி கிடைக்கக்கூடிய தொழிலாளர்களை தொடர்ந்து நிறுவனத்தில் தக்கவைத்துக்கொள்ள என்னென்ன உத்திகள் உள்ளது என்பதை பற்றி விரிவாக இந்தக் கட்டுரையில் நீங்கள் பார்க்கலாம்.

இந்தியாவைப் போன்று வளர்ந்து வரும் நாட்டில் மனித ஆற்றல் அதிக அளவு உள்ளது. இதை சீரான வழியில் பயன்படுத்தினால் நாம் உற்பத்தியை உன்னத நிலைக்கு உயர்த்தலாம். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் கிடைத்து இருக்கக்கூடிய மனித ஆற்றலை திறமையாக பயன்படுத்துவதற்கு என்ன வழி முறைகளை என்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என்பதை பற்றி இனி பார்க்கலாம்.

தொழிலாளர்களை ஊக்கப்படுத்துதல்

?வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களின் திறமை உணர்ந்து அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துவதன் மூலம் அவர்கள் சலிப்பு ஏதும் இல்லாமல் வேலையை விரும்பி செய்வார்கள்.

*?ஒவ்வொரு முறையும் அவர்கள் செய்யக் கூடிய செயலை முதலாளிகள் உற்சாகப்படுத்தும் போது அவர்களுக்குள் ஒரு புத்துணர்ச்சி ஏற்படும். அது மட்டுமல்ல அவர்கள் செய்யும் செயலில் ஏற்படும் லாபம் என்ன? நட்டம் என்ன ?என்பதைப் பற்றி அவர்களிடையே கலந்து உரையாடும்போது ஒரு தொழிற்சாலையின் முன்னேற்றத்திற்கான முழு முதுகெலும்பாய் அவர்கள் இருப்பார்கள்.

 *?ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் அவர்களுடன் பழகுவதன் மூலம் அவர்களின் எண்ணத்தை மிகத் தெளிவாக புரிந்து கொள்ளலாம். அதன் மூலம் அவர்களுக்கு எது தேவையோ அதை செய்து கொடுப்பதின் மூலம் தொடர்ந்து நமது நிறுவனத்தில் அவர்கள் பணியாற்றுவதற்கு விரும்புவார்கள்

தொலைநோக்குப் பார்வை பற்றி தொழிலாளர்களிடம் பகிர்ந்து கொள்ளுதல்

​                 ஒரு நிறுவனத்தை மிகச் சீரிய முறையில் நடத்துவதற்கு தொலைநோக்குப் பார்வை என்பது மிகவும் முக்கியமான ஒன்று அத்தகைய தொலைநோக்குப் பார்வையில் என்னென்ன திட்டங்கள் உள்ளது என்பதை நாம் மட்டும் திட்டமிட்டால் போதாது உடன் பணிபுரிவோரும் நிறுவனத்தின் அங்கத்தினரே, உங்களது தொலைநோக்குப் பார்வை பற்றிய விரிவான கருத்துரையை அவர்களோடு பகிர்ந்து கொள்வதின் மூலம் என்ன செய்யவேண்டும் எப்படி செய்யவேண்டும் என்ற தெளிவு அவர்களுக்கு ஏற்படும் இதன் மூலம் தொழிலாளர்களுக்கு இடையே உள்ள உறவு பலப்படும் இந்த உறவு பலப்படும் போது அவர்கள் தொடர்ந்து நிறுவனத்தில் பணியாற்றுவார்கள்.

​நிறுவனத்தின் வளர்ச்சி + தொழிலாளர்களின் வளர்ச்சி

tem ponding

employee happiness

தங்கள் நிறுவனத்தில் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களின் வளர்ச்சியை கூட்டும் வகையில் எண்ணற்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.

*?உதாரணமாக தொழிலாளர்கள் மேல்படிப்பு படிக்க விரும்பினால் அவர்களுக்கு அதற்கான வாய்ப்பினை வழங்கி நிறுவனம் உதவி புரிய வேண்டும்.

*?பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை அளித்தல் மூலம் அவர்கள் தொடர்ந்து அதே நிறுவனத்தில் பணியாற்றுவார்கள்.

*?நிறுவனத்தின் வளர்ச்சி தொழிலாளரின் கையில்தான் உள்ளது என்பதை உணர்ந்து தொழிலாளர்களும் நிறுவனத்தின் பங்குதாரர் என்ற எண்ணத்தோடு பழகும்போது அவர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் ஏற்படாமல் தொடர்ந்து அந்த நிறுவனத்தில் ஓர் குடும்ப உறுப்பினராகவே

பணியாற்றுவார்கள்.

வெற்றியும் வெற்றிக்கான வெகுமதியும்:

?நிறுவனம் வெற்றியை கொண்டாடும் போது அந்த நிறுவனத்தை உயர் திட்ட தொழிலாளர்களுக்கு வெகுமதி அளித்து அவர்களையும் மதித்து மனிதராக நடத்தும்போது தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணியாற்ற கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக ஏற்படும்.

?காரல் மார்க்ஸ் லெனின் சொன்னதைப்போல தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்தக்கூடிய நிறுவனங்கள் என்றுமே வளர்ச்சியை நோக்கித்தான் செல்லுமே தவிர வீழ்ச்சியை சந்திக்காது.

?அதேபோல் தொடர்ந்து தொழிலாளர்களை தக்கவைத்துக்கொள்ள நட்புடன் வேலை செய்யக்கூடிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தும் போது வேலைப்பளு அதிகமாக தெரியாது. மாதத்திற்கு ஒருமுறை அவர்களுக்கு புத்தாக்க பயிற்சிகள் நடத்தலாம் இதன்மூலம் அவர்களின் மன அழுத்தம் குறைந்து சீரிய முறையில் பணியாற்றக்கூடிய சூழ்நிலை அமையும் இது போன்ற சூழ்நிலைகளை நாம் அமைத்துக் கொடுப்பதன்மூலம் தொடர்ந்து இந்தப் நிறுவனத்திலேயே பணி செய்யலாம் என்ற எண்ணம் அவர்களின் மனதில் எப்போதும் குடி கொண்டிருக்கும்.

​நிறுவனத்தில் பணிபுரிவோர் உடைய மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும்.



Author: Thamizh

Leave a Reply