- 11/04/2020
- Posted by: Thamizharasu Gopalsamy
- Category: Personal Development

நாம் வெற்றி இலக்கை நோக்கி பயணிக்கும் பொழுது நமது உடல் அதற்கு ஏற்ற வகையில் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே நான் அந்த இலக்கை தொய்வின்றி அடைய முடியும். தற்போது உள்ள தலைமுறை நண்பர்களிடையே ஒருவிதமான கதை பேசப்பட்டு வருகிறது. அடிப்படையில் அந்த கதை மிகவும் உண்மையானது தான்.
தனது வாழ்க்கையையும் தனது பொருளாதாரத்தையும் உச்சத்துக்கு கொண்டு செல்ல வேண்டுமென்று இரவு பகல் பாராது இன்றைய தலைமுறையினர் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய பிற்காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு அதிக அளவில் செலவிடுகின்றனர். மகிழ்ச்சி இல்லாமல் வாழ்கின்றனர். உங்கள் முழுமையான வாழ்க்கையையும் அழகாக அமைத்துக் கொள்வதற்கு தமிழரசு அவர்கள் கீழ்வருமாறு கூறியுள்ள கருத்துக்களை உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கை முழுவதும் மிகவும் அழகானதாக அமையும்.
எப்பொழுதும் நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது
தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும்” என்ற சொற்களுக்கு ஏற்ற வகையில் நமது வாழ்க்கை அமைந்துவிட்டால் நம்பிக்கையோடு வெற்றி இலக்கை நாம் எட்டிப் பிடித்து விடலாம். பூக்களில் தேன் இருக்கிறதா? இல்லையா? என்பது தேனீக்களுக்கு பிரச்சனையே இல்லை. ஆனால் தேன் இருக்கும் பூக்களை ஒவ்வொரு நிமிடமும் தேடி சென்று தேனை சேகரிப்பது என்பது அதனுடைய கடமையாகவே எண்ணி தினமும் செய்கிறது.
17 முறை தோல்வியை தழுவிய தழுவிய கஜினிமுகமது ஒரு சிலந்தி வலை பின்னுவதை பார்த்தார். பலமுறை தோல்வியுற்ற அந்த சிலந்தியானது கடைசியாக வெற்றியடைந்தது. இதைப் பார்த்த உடனே தான் அவருக்குள் ஒரு நம்பிக்கை பிறந்தது. பின்பு மீண்டும் படையெடுத்து வெற்றியடைந்தார். முடிந்த மற்றும் நடக்காத விஷயத்தை எண்ணி ஒரு நிமிடம் கவலைப்படுவது கூட நமக்கு பயன் அளிக்க போவதில்லை. மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் அடுத்தத ஆக்கப்பூர்வமான என்ன காரியங்களில் ஈடுபட வேண்டும் என்று நமது மனதினை செலுத்தும் பொழுது நமது மனதிற்கும் உடம்பிற்கும் புத்துணர்வாக இருக்கும் இந்த விஷயம் உடல் நலத்திற்கு மிகவும் முக்கியம்.
மனதின் அற்புத சக்தி
உங்கள் எண்ணங்கள் மற்றும் எண்ண ஓட்டங்கள் எப்பொழுதும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் எண்ணங்கள் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை பயக்கக் கூடியவையாக உள்ளனவா என்று உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் மனதில் எந்த விஷயங்களை நீங்கள் விதைத்தாலும் அது உங்களுக்காக செய்து முடித்து விடும். அது நல்ல விஷயமாக இருந்தாலும் அல்லது உங்களுக்கு கெடுதல் விளைவிக்கக் கூடியவையாக இருந்தாலும்.
உங்கள் மனதையும் உடலையும் ஒருமுகப்படுத்தி புத்துணர்வையும் உடல் ஆரோக்கியத்தையும் பேண கூடிய யோகா கலையை கற்றுக்கொண்டு செய்து வருவது மிகவும் நல்லது. அது மட்டுமல்லாது மிகவும் இறுக்கமான மனநிலை உள்ள நேரங்களில் மெல்லிசையை கேட்பது, இசையில் உங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதும். உங்கள் மனதினை முழுவதுமாக உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது உங்களுக்கு மிக உயர்ந்த அளவில் நன்மையை அளிக்கும்.
ஆரோக்கியத்தைப் பேணுங்கள்
ஆரோக்கியமான வாழ்விற்கு சத்தான உணவு வகைகளை நாம் எடுத்துக்கொள்வது நமது உடல் நலனுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும் அதில் தினந்தோறும் மூன்று லிட்டர் தூய்மையான குடிநீரை பருக வேண்டும். அந்தந்த காலகட்டங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழ வகைகளை எடுத்துக்கொள்ளும் பொழுது வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் எடுத்துக் கொள்வதற்கு உறுதுணை புரிகின்றன.
அதிக அளவு சர்க்கரை மற்றும் துரித உணவு வகைகள் ஆகியவற்றை தவிர்த்தல் உங்களுடைய உடல் நலனிற்கு சிறந்தது. உடல் நலனுக்கு நீங்கள் என்ன உணவினை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பது மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது சரியான நேரத்தில் தேவையான அளவு மட்டும் உணவினை எடுத்துக் கொள்வது உங்களது உடல் நலனிற்கு உகந்ததாக அமையும்.

vegetable eating healthy
உடற்பயிற்சியின் அற்புதம்:
தினந்தோறும் உடற் பயிற்சியை மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகளை நாம் அறிந்துள்ளோம் ஆனால் நம்மில் எத்தனை பேர் தினந்தோறும் உடற்பயிற்சி செய்கின்றோம்? உடற்பயிற்சியின் மூலமாக எதனை அடைய வேண்டும் என்று நம்மில் எத்தனை பேர் இலக்குகளை நிர்ணயித்துள்ளோம்? எந்த ஒரு வேலைக்கும் இலக்குகள் முக்கியமல்லவா? அப்படி என்றால் உடற்பயிற்சிக்கான இலக்குகளை எவ்வாறு நிர்ணயிப்பது? நமது எடை சரியான அளவில் உள்ளதா? எப்பொழுதும் சரியான அளவில் பராமரிக்கிறோமா?

exercise daily
நாம் தினந்தோறும் ஓட்டப் பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களில் இணைந்து உடற்பயிற்சிகளை மேற்கொள்வது ஆகியவை நீண்ட காலம் ஆரோக்கியமாகவும் உடல் நலத்துடனும் வாழ்வதற்கு உறுதுணை புரிகின்றன.
உடல் நலம் இல்லாமல் ஒன்றுமே இல்லை என்பதனை நீங்கள் மனதில் ஆழமாகப் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் உடல் நலனை சிறப்பாக வைத்துக்கொள்வதற்கு மனதினை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.
எப்பொழுதும் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் வெளிப் படுத்திக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் உடல் நலனையும், மன நலனையும் நன்றாக பராமரிப்பதன் மூலம் அளவு கடந்த செல்வத்தையும், புகழையும் உங்களால் வசப்படுத்த முடியும்.
SHARE THIS POST :

About Mr.Thamizharasu
Hi., I am Thamizh well known- Author,Speaker and Tamilnadu’s No:1 Business Coach and fitness enthusiast. I am a son of educationist and teacher and brother of successful business women., I have worked with more than 300 entrepreneurs in various domains such as Retail, Finance, Textile, Engineering etc. I am on mission to empower 100000 entrepreneurs to achieve their goals and ambitions by providing proven business tools, systems and Strategies.
Leave a Reply
You must be logged in to post a comment.