எவ்வாறு தொழிலில் வளர்ச்சி பெறுவது?

  எவ்வாறு தொழிலில் வளர்ச்சி பெறுவது?

                        நாம் உற்பத்தி செய்யும் பொருளையோ அல்லது நாம் வழங்கும் சேவையிலோ திட்டமிடுதல் மற்றும் பொருட்களையோ சேவையையோ தேவைப்படுவோருக்கு வழங்குதல் மட்டுமே இன்றைய சூழ்நிலையில் போதுமானது அல்ல. இன்றைய போட்டி மிகுந்த பொருளாதார சூழ்நிலையில் எந்த நிறுவனங்கள் தங்களுக்கென்று ஒரு வித்தியாசமான உத்திகளைக் கையாள்கிறார்களோ அந்த நிறுவனங்கள் மிகப் பெரும் வெற்றி அடைந்த நிறுவனங்களாக மாறுகின்றன. ஒரு சிறிய உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், ஒரு சிறிய கடைக்குச் தேவையான பொருட்களை வாங்கும் போது உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பாலும் தள்ளுபடி சலுகைகளை வழங்குவதில்லை. ஆனால் ஏராளமான கிளைகளை கொண்டுள்ள நிறுவனங்கள் அதிக அளவில் கொள்முதல் செய்வதால் அதிக அளவில் தள்ளுபடி வழங்குகிறார்கள. இதன் மூலம் அந்த உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயிக்கும் எம்.ஆர்.பி. விலையை விட இவர்கள் குறைவான விலையை நிர்ணயித்து விற்கிறார்கள். இதில் உள்ள வியாபார யுக்தி என்னவென்றால் குறைந்த இலாபம்.. அதிக விற்பனை என்பதாகும். இதன் காரணமாக நுகர்வோர்களும் பயனடைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

                   போட்டிகள் மிகுந்த இன்றைய காலகட்டத்தில் நமது நிறுவனத்தில் இருக்கும் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியே நாம் யுக்திகள் வகுக்க வேண்டியுள்ளது. அதற்கு நாம் பயன்படுத்தவேண்டிய முக்கிய விஷயங்களைப் பற்றி இங்கு காணலாம்

உங்கள் போட்டியாளர்களை பகுப்பாய்வு செய்வது எப்படி ?
  •           நமது பொருளுக்கு முதல் ஐந்து போட்டியாளர்கள் யாரென்பதை கண்டுபிடித்து வைத்திருக்க வேண்டும்.அவர்களின் வியாபார உத்திகளை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உதாரணமாக அவர்கள் எவ்வாறு விளம்பர யுத்திகளை கையாளுகின்றனர். புதிதாக ஏதும் ஆபர்கள் கொடுக்கின்றனர.சமூக வலைத்தளங்களில் எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இணையதளங்களில் அவர்களுடைய பங்களிப்பு எவ்வாறு உள்ளது. ஆகியவற்றை நீங்கள் ஆராயும்பொழுது உங்களால் அவர்களின் தரத்தையும் புதிய முயற்சிகளையும் அளவிட முடியும்.
  •             உங்கள் வாடிக்கையாளர்களுக்கு உங்கள் போட்டியாளர்கள் பற்றி நன்றாக தெரிந்திருக்க வாய்ப்புண்டு அவர்களின் தேவையை நீங்கள் கேட்கும் பொழுது உங்கள்  போட்டியாளர்களை பற்றி தெரிந்து கொள்ள உங்களுக்கு எளிதாக இருக்கும்.
  •              நமது விற்பனைப் பிரதிநிதிகள் இடமும் தொடர்ந்து போட்டியாளர்களை பற்றிய தகவல்களை அளிக்குமாறு அவர்களை நாம் சந்திக்கும் பொழுது கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம். உங்கள் சேவையையோ பொருளையோ எளிதாக விற்பனை செய்வதற்கான உறுதிப்படுத்தப்பட்ட வழிமுறைகள் என்று இந்தப் புத்தகத்தை இங்கு கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
  •                வேலைக்கு நீங்கள் ஆட்களை தேர்வு செய்யும் பொழுது உங்கள் போட்டியாளர் நிறுவனத்திலிருந்து யாராவது உங்களிடம் விண்ணப்பித்திருந்தால் அவர்களிடமும் நீங்கள் தகவல்களை சேகரிக்க முடியும்.   இதனை சாதுரியமான முறையில் நீங்கள் செய்தாலே உங்கள் தொழிலில் எளிதில் வெற்றி பெறக் கூடிய வழிகளை நீங்கள் கண்டறியலாம்.

துணிச்சலான இலக்குகள்

                   உங்கள் தொழிலில் மிகப்பெரிய வளர்ச்சி அடைவதற்கு துணிச்சலான மிகப் பெரிய இலக்குகளை நிர்ணயித்து அதற்குத் திட்டமிட்டு தொடர்ந்து அதனை செயல்படுத்தி வந்தீர்களானால் அதனை அடைவது நிச்சயம். அதற்கு இன்று பல்வேறு வாய்ப்புகள் உள்ளன.

             உதாரணமாக ஃபேஸ்புக் நிறுவனத்தை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் 10 ஆண்டுகளுக்குள்ளாக தோராயமாக 600 பில்லியன் டாலர் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இந்திய மதிப்பில் 42 லட்சம் கோடிகள் அளவுக்கு குறுகிய காலத்தில் வளர்ந்து உள்ளது.

             அதே போன்று கார்கள் தயாரிக்கும் நிறுவனமான டெஸ்லா குறுகிய காலத்தில் 8 லட்சம் கோடி நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்த கால கட்டத்தில் சரியான யுக்திகளை பயன்படுத்தும் பொழுது மிகப்பெரிய வளர்ச்சியை நம்மால் அடைய முடியும். நீங்கள் இப்பொழுது செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் நிறுவனத்திற்கு துணிச்சலான மிகப் பெரிய இலக்கை நிர்ணயம் செய்யுங்கள். அந்த இலக்கினை அடைவதற்கான திட்டமிடுவதற்கு உங்களுக்கு எளிதாக இருக்கும்.

Set goal

set goal for business growth

செயல் திறனை மேம்படுத்துவதற்கான வழிகள்  

  •          தினந்தோறும் என்ன செய்ய வேண்டும் என்ற பட்டியல் உடனே தினந்தோறும் உங்கள் வேலையை நீங்கள் தொடங்க வேண்டும்.
  •          இன்றைய போட்டி நிறைந்த பொருளாதார சூழ்நிலையில் தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் உதாரணமாக  வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை சிஆர்எம் (CRM Software) மென்பொருள்.  விற்பனை, சந்தை படுத்துதல் ஆகிய துறைகளுக்கு நமது நிறுவனத்தில் மென்பொருளை நாம் முற்றிலுமாக பயன்படுத்தும் பொழுது குறைந்த செலவில் அதிகமான வாடிக்கையாளர்களை அடைவதற்கு உறுதுணையாக இருக்கும்.
  •           சந்தைப்படுத்துதலுக்கு சமூக வலைத்தளங்களில் நாம் புதிய வாடிக்கையாளர்களை அதிகமாக கவர முடியும்.   ஃபேஸ்புக்,யூடியூப், ட்விட்டர், லிங்க்ட்இன், அனைத்து விதமான சமூக வலைத்தளங்களையும் ஒரே இடத்திலிருந்து நிர்வகிப்பதற்கு இன்று பல்வேறு மென்பொருள்கள் வந்துவிட்டன. இவ்வாறு மென்பொருளை பயன்படுத்தும் பொழுது குறைந்த நேரத்தில் அதிக வாடிக்கையாளர்களை கவர்வதற்கு எதுவாக இருக்கும்.
  •           நமது நிறுவனங்களின் நேரடி வேலைகளை குறைத்துக் கொண்டு பல்வேறு வேலைகளை நாம் அவுட்சோர்ஸ் செய்யலாம். உதாரணமாக தொழில்நுட்பம் சார்ந்த வேலைகளை நாம் டெலிகேட் செய்யும் பொழுது குறிப்பிடும்படியாக நேரமும் பணமும் சேமிப்பாகின்றன. இன்று டெலிமார்க்கெட்டிங், வாடிக்கையாளர் சேவை  ஆகியவற்றை களைக் கூட நாம் நிறுவனத்திலிருந்து செய்யாமல் டெலிகேட் செய்ய முடியும்.  செய்யும் பொழுது நமது தொழிலின் திறன் மேம்படுகின்றது.

உங்களை நீங்களே கொண்டாடுங்கள்:

               கொண்டாட்டம் என்பது சிறுவர்களுக்கு மட்டுமல்ல எல்லா தரப்பு வயதுடைய மக்களுக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த கொண்டாட்டம் தான் மனிதனின் உடலுக்கும் மூளைக்கும் உற்சாகத்தை கொடுக்கும் .எனவே ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒவ்வொரு சின்னச் சின்ன வெற்றியையும் கொண்டாடும் பொழுது, அவ்வாறு கொண்டாடுவதன் மூலம் உங்களது உத்வேகம் இன்னும் அதிகரிக்கப்படும். நீங்கள் அடைய வேண்டிய இலக்கை விரைவாக அடைய இந்த உற்சாக கொண்டாட்டங்கள் வழிவகுக்கும்.

            உங்களது நிறுவனத்தில்  இது போன்ற உத்திகளை பயன்படுத்தும் பொழுது அதிக அளவில் நேரமும், பணமும் சேமிக்கப்படுகின்றன. உங்கள் நிறுவனத்திற்கு யுக்திகளை வகுப்பதற்கு தமிழரசு அவர்களை அணுகவும்.  தொடர்புக்கு : 7708877077

   Share This Post

About Mr.Thamizharasu

                  Hi., I am Thamizh well known- Author,Speaker and Tamilnadu’s No:1 Business Coach and fitness enthusiast. I am a son of educationist and teacher and brother of successful business women., I have worked with more than 300 entrepreneurs in various domains such as Retail, Finance, Textile, Engineering etc.  I am on mission to empower 100000 entrepreneurs to achieve their goals and ambitions by providing proven business tools, systems and Strategies.
Leave a Reply