• Posted by: Thamizh
  • Category: Entrepreneurship
emloyement vs Entrepreneurship

Self-employment vs entrepreneurship

நாம் தொழில் முனைவோராக (Entrepreneur) இருக்கின்றோமா அல்லது சுய தொழில் செய்கின்றோமா (Self-employment) என்று நம்மை பற்றி நாம் சுய பரிசோதனை செய்து கொள்ளும் பொழுது நமது வளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது.

ஏன் நாம் சுய தொழில் செய்பவராகவே இருக்கின்றோம் ?

பல தொழில் முனைவோர் நல்ல வளர்ச்சி அடையாமல் இருப்பதற்கு மிகவும் முக்கியமான காரணம். தொழிலில் நல்ல வளர்ச்சி பற்றி மட்டும் சிந்திக்காமல் நிறுவனத்தில் விற்பனை (Sales), சந்தைப்படுத்துதல் (Marketing), மேலாண்மை (Management), நிதிமேலாண்மை (Finance), உற்பத்தி/ சேவை (Operations) மனிதவள மேலாண்மை(Human Resource) ஆகிய அனைத்திலும் தினமும் உங்கள் ஈடுபாட்டு உடனேயே நடக்கும் பொழுது பொழுது நாம் சுய – தொழில்   செய்வோராகவே இருக்கின்றோம். மேலே சொன்ன அனைத்து துறைகளிலும் நம் கவனத்தை தொழிலில்/வியாபாரத்தில் செலுத்தும் பொழுது தொடர்ந்து சிறப்பாக செயல்பட முடிவதில்லை. உங்களுடைய திறமை, நேரம், பணம், உழைப்பு, ஆகிய அனைத்தையும் முழு மனதுடன் அர்ப்பணித்த பின்பும் நாம் எதிர்பாக்கும் வளர்ச்சியையும், வெற்றியையும் நாம் அடைய முடியாமல் இருப்பதற்கு தொழில் முனைவோராக இருப்பதற்கு பதிலாக சுய தொழில் (Self Employment) செய்து கொண்டு இருப்பதே ஆகும்.

 

தொழில் முனைவோராக மிக சிறந்த வெற்றி அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்?

நாம் முறையான வியாபார முறையை அறிவியல் பூர்வமாக வடிவமைக்காத காரணத்தினாலேயே நாம் மிகவும் நல்ல வளர்ச்சி நிலைக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கின்றோம்.

தொழிலில் நல்ல வளர்ச்சி நிலைக்கு செல்வதற்கு விற்பனை (Sales), சந்தைப்படுத்துதல் (Marketing), மேலாண்மை (Management), மனிதவள மேலாண்மை(HumanResource) நிதி மேலாண்மை (Finance), உற்பத்தி/ சேவை (Operations) மேல் வரும் செயல்பாடுகள் அனைத்தும் அறிவியல் பூர்வமாக வடிவமைத்து தொடர்ந்து தினமும் சிறப்பாக செயல்படும்  பொழுது நம்மால் நாம் செய்யும் தொழிலில்/வியாபாரத்தில் மிகச்சிறந்த வெற்றியினை அடைய முடிகின்றது.

நீங்கள் உங்கள் தொழிலில் மேல் சொன்ன மாற்றங்களை செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.

Leave a Reply